பாஜக சங்க நிறுவனர்களில் ஒருவரான பண்டித தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மத்திய அரசு எய்ம்ஸ்யை 150 மாணவர்களுடன் இந்த வருடம் திறக்க அனுமதி கொடுத்த பின்பும், தமிழக அரசானது திறக்க வேண்டாம் என பிடிவாதம் பிடிப்பது ஏன்?
தமிழக அரசானது, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆலோசனை செய்ய வேண்டுமேயொழிய தேவையில்லாத விஷ பரீட்சைகளில் ஈடுபட வேண்டாம். திமுக ஆட்சியில் கடந்த 4 மாதத்தில் நடந்த தவறுகள் ஏராளம் ஆகும். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஏ.கே ராஜன் கமிட்டி ஆனது மிகவும் எதிர்ப்புகளை கொண்டுள்ளதாகும். நீட்டானது, கல்வியை வியாபார சந்தையாக இருந்ததை மாற்றி உள்ளது. இதை குறித்து ஏகே ராஜன் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை” என பேசியுள்ளார்.