ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட புயலின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இது நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இந்த புயல் 520 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும். இந்த நிலையில் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புயலின் புகைப்படத்தை முதல்முறையாக இஸ்ரோ தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கூறியிருந்ததாவது, “இந்த புகைப்படம் ராக்கெட்டில் அனுப்பிய ECO -06 என்ற செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்டது. மேலும் இந்த புயலை செயற்கைக்கோள் மூலம் அறிந்து வருவதாக” தெரிவித்துள்ளது.