Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! மக்களே “இந்த சேமிப்பு கணக்கை உடனே தொடங்குங்கள்”…. சலுகைகளை வாரி வழங்கும் போஸ்ட் ஆபீஸ்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தபால் நிறுவனம் மக்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

நமது நாட்டில் உள்ள தபால் நிறுவனம்  புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிக அளவில் மக்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். அதேபோல் தற்போது தபால் துறை வங்கி  Indian Post payments Bank, premium savings account ஆகிய சேவை வழங்குகிறது. இந்த பிரீமியம் சேமிப்பு மூலம் நீண்ட காலம் பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் சேமிக்கலாம். மேலும் இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளது.

1. உங்கள் வீட்டிற்கே நேரடி வங்கி சேவைகள் இலவசமாக வழங்கப்படும்.

2. இதில் நீங்கள் இலவசமாக பணம் டெபாசிட் செய்யலாம் மற்றும் எடுக்கலாம்.

3. டிஜிட்டல் டெபிட் கார்டு  பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், வாழ்நாள் சான்றிதழ், ஜீவன் பிரமான் பத்திரம் ஆகிய சேவைகளுக்கு கேஷ் பேக் வழங்கப்படுகிறது.

4. இதில் கணக்கு தொடங்க 10  வயதை தாண்டி இருந்தால் போதும்.

5. ஆண்டுக்கு சராசரியாக 2,000 ரூபாய் இருப்பு வைத்து பராமரிக்க வேண்டும்.

6. இதனையடுத்து புதிய கணக்கு தொடங்க  149 ரூபாயும், பழைய வாடிக்கையாளர் கணக்கை தொடங்க 149 ரூபாயும், ஆண்டு சந்தா புதுப்பித்தல் தொகையாக 99 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

7. 1  லட்சம் ரூபாய் வரையிலான இருப்புத் தொகைக்கு 2 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதேபோல்  2  லட்சம் ரூபாய் வரையிலாக இருப்புத் தொகைக்கு  2. 25 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

Categories

Tech |