இந்து சமய அறநிலை துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு தமிழகத்தில் வசித்து வரும் மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் முதல் காசி விஸ்வநாதர் கோவில் வரை ஆன்மீக பயணம் இலவசமாக அழைத்து செல்வதாக அறிவித்திருந்தது. இதுகுறித்து இன்று இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் இந்து சமய அறநிலைத் துறையின் 20 இணை இயக்குனர் மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் என மொத்தம் 200 பேரை அழைத்துச் செல்ல தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 20 மண்டலங்களில் இருக்கும் ஆணையர்கள் தலா 10 பேரை தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்த பயணத்திற்கு வர விரும்புபவர்கள் 60-வயதிலிருந்து 70 வயதுடையவர்களாகவும், ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாயாகவும் இருக்க வேண்டும் என அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.