சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் காட்சிகளை ஆஸ்கர் விருது குழு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது இந்திய சினிமாவுக்கே கிடைத்த கவுரவம் என்று திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் பழங்குடியினத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் சட்டப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு உண்மை கதையாகும்.
இந்நிலையில் இந்த படத்தின் சில பகுதிகளை ஆஸ்கர் விருது குழு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது. இது குறித்து திரையுலக பிரபலங்கள் கூறியதாவது, ஆஸ்கர் விருது குழு தனது யூடியூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகளை பகிர்ந்துள்ளது இந்திய சினிமாவுக்கே கிடைத்த கவுரவம் என்று தெரிவித்துள்ளார்கள்.