டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா வழக்குகள் குறைந்து இருப்பதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குப்பின் அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு செய்திருக்கின்றது. முன்னதாக டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருப்பதால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என டெல்லி அரசு அறிவித்திருக்கிறது. மேலும் கொரோனா மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் சேவைகள் ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் புதன்கிழமை நிலவரப்படி 17 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கொரோனாவிற்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதார துறை கூறியுள்ளது.