நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் பார்த்த சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, நிறைய படம் பார்த்தோம். இந்த படம் ஒரு படம் இல்லை ஒரு பாடம் என்று சொல்வோம். அது எல்லாம் எவ்வளவு பொய்யானது என்று இந்த படம் பார்க்கும் பொழுது தெரியும். உண்மையிலேயே இது தான் படம் அல்ல பாடம். இதை திரையில் ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
தம்பி மாரி செல்வராஜ் பொறுத்தவரைக்கும் அவனுடைய அனுபவம், அவனுடைய வயது இதையெல்லாம் தாண்டிய ஒரு ஆகச் சிறந்த படைப்பு.தான் சொல்லவரும் கருத்தை அழுத்தமாக சொல்ல வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்போம். ஆனால் அதற்காக வலியை காட்சியில் திணித்து, உரையாடல் சத்தமாக பேசி, அப்படி எல்லாம் இல்லை. அவன் மெல்லிய வடிவில் அவனுடைய வலியை ஒவ்வொருவருக்கும் கடத்தி இருக்கிறான். அதுதான் ஆகச்சிறந்த படைப்பு.
சமூகத்தில் சாதியம் எவ்வளவு ஒரு கொடிய நோய் என்பதை இந்தப்படம் தெளிவாக உணர்த்துகிறது. அதற்குக் காரணமானவன்…. அதே மாதிரி செயல்களில் ஈடுபட்ட…. அதே மாதிரி சிந்தனை உள்ளவன்…. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது தலைகுனிவான். அந்த காயத்தை நீண்ட காலமாக சுமந்து வருபவன் கண்ணீரோடு மௌனமாக கடந்து போவான். இது இரண்டையும் ஒரே திரைப்படத்திற்கும் ஒருத்தர் கடத்துவது என்பது, 50 ஆண்டுகளில் சாதி ஒழிப்புக்காக எத்தனையோ இயக்கங்கள் எவ்வளவோ நம் முன்னோர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள்.