தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நிலை காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து பார்த்தனர். இந்நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து பொது சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார்7 என்று தகவல் வெளியாகி உள்ளது.