Categories
மாநில செய்திகள்

அப்படியா! கட்டுவீங்க, கட்டுவீங்க…. தடுத்தே தீருவோம்…. அமைச்சர் துரைமுருகன் பதிலடி…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும்.

மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக துரைமுருகன், மேகதாது அணையை எந்த நிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம். ஒரு மாநிலத்திற்கு ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கு என்று சொந்தம் கொண்டாட முடியாது. நதிநீர் என்பது தேசிய சொத்து என்பதை கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என்று கருதுகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |