Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. தீபாவளி பரிசாக…. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வைரம் ஏற்றுமதி நிறுவனம்….!!!

தீபாவளியையொட்டி இந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ், அன்பளிப்புகளை வழங்குகிறது. அதில் சில நிறுவனங்கள் அத்தகைய பரிசுகளை என்றும் நினைவில்கொள்ளத்தக்க அடிப்படையில் வழங்குகிறது. அந்த அடிப்படையில் சூரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன் நிறுவனத்தின் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சூரியமின் தகடுகளை(சோலார்) தீபாவளி பரிசாக வழங்கி அவர்களது வீடுகளில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்.

இதுபோன்ற தீபாவளி பரிசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும், மறக்க முடியாத பரிசுகளில் ஒன்றாகவும் பேசப்படுகிறது. சூரத்தின் புகழ்பெற்ற வைரம் ஏற்றுமதி நிறுவனம் ஆன ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர்-எஸ்ஆர்கே நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்த்பாய் தோலாக்கியா, தன் நிறுவனத்தின் 1000 ஊழியர்களுக்கு தீபஒளி திருநாள் பரிசாக சூரியமின் தகடுகளை(சோலார்) வழங்கியுள்ளார்.

Categories

Tech |