இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. 17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா தெலுங்கு, மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்து அங்கும் நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கிடையில் லேடி சூப்பர் ஸ்டார் நயனும், விக்னேஷ் சிவனும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், நயன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் பிறந்தநாள் கொண்டாடியபோது குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட போட்டோவை விக்கி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு. ‘குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு, ‘நயன் கர்ப்பமாக இருக்கிறாரா’ என ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஹார்ட்டின் எமோஜியை பறக்கவிட்டு இருக்கிறார்.