பெண் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து புறப்பட்ட ரயில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதன் பின் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு மெதுவாக செல்லத்தொடங்கியது. அப்போது பெண் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பதற்றத்துடன் கீழே இறங்கினார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தனது மகள் உணவு பொருட்களை வாங்குவதற்காக நடைமேடையில் இறங்கியதாகவும், மீண்டும் தனது மகள் ரயிலில் ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டு சென்றதால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அதன்பின் அந்த பெண்ணின் மகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு ரயிலில் ஏற்றி அனுப்பினர். மேலும் அந்த பெண்ணின் முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களை காவல்துறையினர் வாங்கிக்கொண்டு உணவு பொருட்கள் வாங்குவதற்காக இறங்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.