Categories
சினிமா தமிழ் சினிமா

அன்று ரூ.20 டிப்ஸ்க்காக…. இன்று ரூ.17 லட்சத்தில் சொந்தமாக…. ரசிகர்களை நெகிழ செய்த புகழ்…!!

சிலர் தங்களுடைய வாழ்க்கையில் பல துயரங்களையும், இன்னல்களையும் சந்தித்து கடின உழைப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் நல்ல நிலையை அடைவார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக தற்போது விஜய் டிவி மூலம் பிரபலமான காமெடி நடிகர் ஒருவர் உள்ளார். அவர் வேறு யாருமல்ல தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கும் புகழ் தான். இவர் காமெடி செய்வதில் தனித் திறமை வாய்ந்தவர். இவரை வைத்து எவ்வளவுதான் கலாய்த்தாலும் அதை காமெடியாகவே ஏற்றுக்கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்து விடுவார்.

ஆனால் அனைவரையும் சிரிக்க வைக்கும் இவருடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறது. இவர் தற்போது தன்னுடைய திறமையின் காரணமாக முன்னணி நடிகர்களுடன் கூட நடிக்கும் வாய்ப்பை தன் வசமாக்கியுள்ளார். இதையடுத்து 17 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை சொந்தமாக வாங்கி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ரூ.20 டிப்ஸ் அன்று கார் துடைத்த நான் இன்று சொந்தமாக கார் வாங்கி இருக்கிறேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இடத்தில் புகழ் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Categories

Tech |