Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அன்று முறைத்த கோலி…. “ஆனால் இன்றோ நடந்ததே வேற”….. கிங் கோலியின் செயலால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்.!!

ஒரே ஓவரில் 4 சிக்ஸர் விளாசியதால் விராட் கோலிக்கு சூரியகுமார் யாதவ் அளவு தலைவணங்கி மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர்-4ஐ எட்டியிருக்கிறது.

இப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதில் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்சர் 6 பவுண்டர்கள் என  26 பந்துகளில் 68 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல இவருக்கு உறுதுணையாக விராட் கோலியும் சிறப்பாக ஆடினார். சமீப காலமாக பார்ம் இல்லாமல் தவித்த கிங் கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடினார். கோலி  44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார்.  இந்நிலையில் ஒரு சுவாரசிய சம்பவம் இப்போட்டியில் நடந்துள்ளது.. அதாவது, கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசி ஆட்டமிழக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறிய சூர்யகுமார் யாதவிற்கு விராட் கோலி நெஞ்சில் கைவைத்து தலைவணங்கி  மரியாதை செய்தார்.

முன்னதாக கடந்த 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் போது சூர்யகுமார் யாதவ், விராட் கோலி இருவருக்குமிடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டது.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் ஆடி தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல போராடிய தருணத்தில் பந்தை தடவுவது போல பக்கத்தில் வந்து உடல் மொழியை வைத்து ஸ்லெட்ஜிங் செய்திருப்பார் விராட் கோலி.. அந்த ஆட்டத்தில் இருவருமே முறைத்துக் கொண்டுதான் இருந்தனர்..

இந்த நிலையில் காலங்களும் சென்றுவிட இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர்களையெல்லாம் ரசித்து கொண்டிருந்தது மட்டுமில்லாமல் கடைசியில் அவர் மரியாதை செய்துள்ளார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை சூர்யகுமார் யாதவாலும் நம்ப முடியவில்லை.. பொதுவாக களத்தில் எப்போதுமே ஆக்ரோஷத்தில் இருக்கும் கோலி தற்போது ரொம்ப ரொம்ப மாறிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்..

Categories

Tech |