Categories
தேசிய செய்திகள்

அன்று மசாஜ்… இன்று தடபுடலான உணவு…. சிறையில் மந்திரி சத்யேந்தா் ஜெயினின் சொகுசு வாழ்க்கை…. பரபரப்பு வீடியோ….!!!!!

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவுசெய்த வழக்குப்பதிவு அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின் போன்றோருக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை சென்ற வியாழக்கிழமை நீதிமன்றமானது தள்ளுபடி செய்தது.

சில நாட்களுக்கு முன்பு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு மசாஜ் செய்யும் நபா் ரிங்கு 2021ல் ஜேபி காலன் பகுதியில் மைனா் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் திகாா் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அதன்பின் ஆம் ஆத்மி கட்சியையும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் பாஜக மற்றும் காங்கிரஸ்  கடுமையாக விமா்சித்தது. இந்நிலையில் சத்யேந்தர் ஜெயின் 28 கிலோ எடையை குறைத்ததாகக் கூறினார். அதனை தொடர்ந்து மறுநாள் திகாா் சிறையில் மந்திரி சத்யேந்தா் ஜெயின் ஒட்டலிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள வெரைட்டி உணவுகளை சாப்பிட்டு மகிழும் புது சிசிடிவி வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Categories

Tech |