Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்புமணி ராமதாஸ் மீது…  டிஜிபியிடம் புகார் அளித்த விசிக…!!!

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது விசிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும் பல்வேறு தரப்பினர் இந்த படத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ஜெய்பீம் படத்தில் நடித்திருக்கும் காவல் அதிகாரியை  வன்னிய இனத்தவராக காட்சிப் படுத்தியிருப்பதாகவும், அவரது வீட்டில் இருந்த காலண்டரில் அக்னி கலசம் குறியீடு வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அந்த காட்சிகள் மாற்றப்பட்டது. இருப்பினும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதற்கு பதிலாக நடிகர் சூர்யாவும் அறிக்கை வெளியிட்டார். மேலும் நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தெரிவித்திருந்தார். இப்படி பலரும் நடிகர் சூர்யாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சூர்யாவை வன்மையாக தாக்கவேண்டும் என்று கூறிய குருவின் மருமகன் மனோஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் விசிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசிக மாநில இணைச் செய்தித்தொடர்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளதாவது “படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்வளிக்கும் ரசிகர் தான் பெரியவர்கள். இந்த படத்தில் நீங்கள் வன்மத்தை காட்டினால், அடுத்து உங்கள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்கள் கோபத்தைக் காட்டக் கூடும். இது எதுவும் தேவையில்லை” என்று அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி இதன்மூலம் கட்சி தொண்டர்களை சூர்யாவுக்கு எதிராக வன்முறைக்கு அன்புமணி தூண்டுகிறார் என்றும் இது கிரிமினல் குற்றம் என்றும் கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |