Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்புடன் குஷி’ சீரியல் கதாநாயகி மாற்றம்… புதிதாக இணைந்த பிரபல நடிகரின் காதலி… யார் தெரியுமா?…!!!

அன்புடன் குஷி சீரியலில் ரேஷ்மாவுக்கு பதில் நடிகை ஸ்ரேயா இணைந்துள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று அன்புடன் குஷி. இந்த சீரியலில் நடிகர் பிரஜின், நடிகை மான்சி ஜோஷி ஆகியோர் நடித்து வந்தனர். இதையடுத்து திடீரென மான்சி இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் ரேஷ்மா நடித்து வந்தார். சமீபத்தில் நடிகை ரேஷ்மா அன்புடன் குஷி சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் ரேஷ்மாவுக்கு பதில் நடிகை ஸ்ரேயா இந்த சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் . மேலும் இவர் சீரியல் நடிகர் சித்துவின் காதலி ஆவார். தற்போது நடிகர் சித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |