Categories
ஆன்மிகம்

“அன்னதானம்” என்ற பெயரில் அவர்களுக்கு காணிக்கை வழங்க வேண்டாம்….. திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை….!!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற 27-ஆம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அன்னதானம் என்ற பெயரில் தனி நபருக்கோ, அமைப்புக்கோ பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம். இதனையடுத்து கோவில் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக அன்னதானம் வழங்கும்.

இந்நிலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செகந்திராபாத் அனந்தகோவிந்த தாச அறக்கட்டளை அன்னதானம் செய்யப்போவதாகக் கூறி சமீபத்தில் பக்தர்களிடம் காணிக்கைகள் கேட்டது. திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கும், இந்த அறக்கட்டளைக்கும், எந்த தொடர்பும் கிடையாது. இதுபோன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் வார்த்தைகளை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், சட்டவிரோதமாக காணிக்கைகள் வசூலிக்கும் அறக்கட்டளைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |