உலக அமைதிக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற தவள வெண்ணகை அம்பாள் உடனுறை பாலைவனநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் உலக மக்கள் நலனுக்காக 108 விளக்குகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 108 திருவிளக்குகளை ஏற்றி சாமியை வழிபட்டனர். இதனையடுத்து திருவடி குடில்சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.