திமுக கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும். எனவே அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் கூட்டத்தில் மூத்த தலைவர்களின் ஒருவரான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நமது கட்சியில் புதிய நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.