தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றுள்ளது.
திருவாரூரில் வைத்து தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பாலபாரதி, செயலாளர் குரு சந்திர சேகரன், மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட இணை செயலாளர் புவனேஸ்வரி, துணைத் தலைவர் தமிழரசன், பெத்த பெருமாள், பாலசுப்ரமணியன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், ஓய்வு பெற்ற டாக்டர் நாச்சியார், சமூகநலத்துறை அலுவலர் கஸ்தூரி, ஒன்றிய தலைவர் சீதாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பாலபாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு என்று கூறப்படும் போக்சோ சட்டம் இருக்கும்போதே பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் போலீசார், நீதிமன்றம் போன்ற இடங்களில் போதிய பெண்கள் புகார் அளித்தால் ஆதாரம் இல்லை என்ற பெயரில் குற்றவாளிகளை தண்டிக்காமல் விட்டுவிடுகிறார்கள். எனவே நாம் அனைவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்க போராட வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.