தமிழ் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறோம். இதைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை மாதம் என்பார்கள். இதனை தான் நாம் தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போல் தமிழ் மாதத்திலும் சித்திரை, வைகாசி, ஆனி என்று 12 மாதங்கள் உள்ளன.
சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மாதம் கணக்கிடப்படுகிறது. அதன் காரணமாகத்தான் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தை கொண்டது. பூமி சூரியனை ஒரு தடவை சுற்றி வர 365 நாட்கள் 6 மணி 11 நிமிடம் 48 நொடிகள் ஆகிறது. தமிழ் வருடமும் இந்த கால அளவை பொருத்துதான்.
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு மீன ராசியில் இருந்து வெளியேறும்போது முடிவடைகிறது. ஆங்கில நாட்களில் பெரும்பாலும் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்கு காரணம் ஆங்கில நாட்காட்டி சீரானதாக இல்லை என்பதுதான். நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும் தமிழ்பஞ்சாங்கம் அந்த நாளில் அடுத்த ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடுகின்றனர். எனவே நண்பர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் ,சகோதரர்கள், சகோதரிகள், தம்பிகள் , அக்கா , தங்கை, அண்ணன் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். விரும்பிய யாவும் கிடைக்கப் பெற்று மன நிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிறைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய துவக்கமாக இருக்கட்டும்.