அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றது.
மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் மகாராஷ்டிராவில் அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நவாப் மாலில் தெரிவித்துள்ளார். இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் பட்டியலில் ஹரியானவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.