தமிழக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கண்டார். ரேஷன் கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் அவர் ஆய்வு நடத்தினார்.
சென்னையில் ஒரு பகுதியாக பல்வேறு ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் வண்ண ஓவியங்களுடன் மாற்றப்பட்டு இருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். அதேபோன்று மாநகராட்சி அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முயற்சியால் செயல்படுத்தப்படும் ‘எனது பகுதி எனது ரேஷன் கடை’ என்ற திட்டத்துக்கும் பாராட்டு தெரிவித்தார். பின்னர் கூறிய அவர், கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா என ஆய்வு செய்து கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை கீழே சிந்தாமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரேஷன் கடை உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.