வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை காலை வட தமிழகம் – புதுச்சேரியை ஒட்டி வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து, நீர் தேக்கங்களை கண்காணிக்க, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்க, நிவாரண முகாம்களில் உணவு போன்றவற்றை தயார் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.