Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும்…. விரைவில் ஸ்டாலின் அறிவிப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது நலத்துறை சார்பானது. இதனால் நான் இதைப் பற்றி பேச முடியாது. இருப்பினும் இந்த திட்டத்தால் மாணவர்கள்தான் பயனடைய உள்ளனர். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் இது எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதை விரைவில் அறிவிப்பார்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |