முதல்வர் ஸ்டாலின் இன்று 2 வது நாள் பயணமாக கோவை சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1324.25 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு பேசிய முதல்வர், கோவை விமான நிலைய திட்டத்திற்காக அரசு ரூ.1132 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தி விரைவில் பணி தொடங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து கோவை மாநகர வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்க முடிவு செய்துள்ளது. கோவை முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இதனால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாகும். இந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் கூடுதல் மருத்துவ வசதிக்காக ரூ.16 கோடி செலவில் நல்வாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டு அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
மேலும் சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான வெற்றி கிடைத்தது. ஆனால் கோவையில் நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் அனைத்து மாவட்டத்தில் உள்ள மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் தான் பணியாற்றி வருகிறேன். எனக்கு வாக்களித்தவர்களுக்காக மட்டும் இல்லாமல் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான் பணியாற்றி வருகிறேன்.
இதையடுத்து கோவை மாவட்ட வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக பாலாஜியை தேர்ந்தெடுத்துள்ளேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்களிடம் இருந்து வாங்கிய அனைத்து மனுக்களுக்கு தீர்வு செய்தேன். ஆனால் ஸ்டாலின் பெட்டி திறக்க முடியாது என்று பலரும் விமர்சனம் செய்தார்கள். நான் எப்போதும் அதிகமாக பேச மாட்டேன், என்னுடைய செயலில் என்னுடைய பணி இருக்கும் என்று அவர் கூறினார்.