திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்துகளில் ஜாதி, மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒளிபரப்பக் கூடாது என்று பேருந்து உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு ஜாதி மத பாடல்களால் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அது நாளடைவில் கலவரமாக கூட மாற வாய்ப்புள்ளது. அதனால் அனைத்துப் பேருந்துகளிலும் தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
Categories
அனைத்து பேருந்துகளிலும் தடை…. தமிழகத்தில் பரபரப்பு உத்தரவு….!!!
