சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் புதிய திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் வைஃபை வசதி மற்றும் டிஜிட்டல் முறையில் கல்வி கற்க ஆறுநூறு வகுப்பறைகள் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.95.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்த விளையாட்டு திட்டமும் அமலாக உள்ளது.