இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் ,பொது விநியோக திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றன. மேலும் தற்போது ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தாங்கள் வசித்து வரும் மாநில ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2-ஆண்டுகளாக நிலவிய கொரோனாவினால் ரேஷன் அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் மத்திய உணவு வழங்கல் துறை ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை தற்போது மாற்றி அமைத்துள்ளது. அதன்படி இனி தகுதி பெறாதவர்கள், ரேஷன் கடைகளில் பொருட்களை பெற முடியாது எனவும் , மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர்கள் ரேஷன் பெற தகுதி அற்றவர்களாகவும், மேலும் தங்களது ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் அவ்வாறு ஒப்படைக்கவில்லை என்றால், ஆய்வுக்குப் பிறகு அத்தகையவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். மேலும் அந்த குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே தகுதி பெறாதவர்கள் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் மற்றும் அரசின் பிற சலுகைகளை பெற்று வருவது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.ஆகவே இந்த நடவடிக்கையானது தற்போது மேற்கொள்ளப்பட்டது.