Categories
அரசியல்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுங்க…. முதல்வரை வலியுறுத்திய ஓ பன்னீர்செல்வம்…!!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை குறித்து அடுத்த நடவடிக்கையை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கபட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும். பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக் கூடாது என்பது சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கும் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக இடையூறு அளித்து வரும் கேரள அரசை முதல்வர் தட்டி கேட்க வேண்டும். மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனை திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து அடுத்த நடவடிக்கையை எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு கேரள அரசின் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும். புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |