Categories
தேசிய செய்திகள்

அனுமதி கேட்ட 36 பெண்களை அனுமதிக்கலாமா ? கேரள அரசு ஆலோசனை ..!!

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி தரலாமா என்பது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டுடன் கேரள அரசு ஆலோசனை  நடத்தி வருகின்றது.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற  உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு_க்கு நேற்று உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.

Image result for ஐயப்பன் கோவில் உச்சநீதிமன்றம்

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை திருவிழா மாலை 5 மணிக்கு சபரிமலை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சீசனிலும் 36 பெண்கள் சபரிமலைக்கு அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்து உள்ளனர். ஏற்கனவே சபரிமலை விவகாரத்தில் கேரள ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கடந்த தேர்தலின் போது பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக்கியது.எனவே தற்போது கேரள அரசு மிகவும் கவனமாக இந்த விஷயத்தை கையாண்டு வருகிறார்கள்.

Image result for ஐயப்பன் கோவில் கேரள முதல்வர்

ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல அனுமதி கேட்டு 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் பெண்களை அனுமதிக்கலாமா ?  வேண்டாமா ?  என்று தரப்பில் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த ஆலோசனை நடைபெற்ற நிலையில் தற்போது திருவாங்கூர் தேவசம் போர்டு ஆகிய பல மட்டத்தில் கேரள அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.இந்த ஆண்டு எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னேற்பாடுகளை திருவாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசும் எடுத்து வருகிறார்கள் .

Categories

Tech |