Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாமல் இப்படி செய்யிறவங்க மீது நடவடிக்கை எடுங்க…. காவல்துறையினருக்கு கோரிக்கை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இரட்டை மாட்டு வண்டிகளுக்கான பந்தய ஒத்திகையை புறவழிச்சாலையில் நடத்துவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் சாலை அமைக்கும் பணி ஓரளவில் முடிவடைந்து விட்டது. இருப்பினும் வாகனங்கள் செல்லாமலிருக்கிறது. இதற்கிடையே பொதுமக்கள் காலையும், மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இதனையடுத்து அந்த சாலையில் சில நபர்கள் பந்தயத்திற்காக ரெட்டை மாட்டு வண்டி ஒத்திகையில் ஈடுபடுகின்றனர். மேலும் மாட்டு வண்டியின் பின்னால் சில நபர்கள் பைக்கில் வந்து விசில் அடித்துக் கொண்டும், ஹாரன் ஒலி எழுப்பியும் செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் செல்லும் மக்களுக்கு மிகவும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனவே அனுமதியின்றி இவ்வாறு செயல்படும் நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Categories

Tech |