Categories
இந்திய சினிமா சினிமா

அனுமதியின்றி ஹிந்தி திரைப்படம் யூடியூப்பில்…. சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு….!!!

ஹிந்தி திரைப்படத்தை அனுமதியின்றி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்,  யூடியூப் நிர்வாகத்தின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

“ஏக் ஹசினா தீ ஏக் திவானா தா” என்னும் திரைப்படத்தை பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் அவர்களே எழுத்து, இயக்கம், தயாரிப்பு முதலியவற்றை செய்துள்ளார். படத்தில் முக்கிய வேடங்களில் சிவதர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் படேல் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகாத நிலையில் யூடியூபில் சட்டவிரோதமாக பதிவுவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் நிர்வாகத்திடம் இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதை நீக்கவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

சுனில் தர்க்ஷன் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் கூறியதாவது  காப்புரிமை சட்டத்தை மீறி யூடியூபில் திரைப்படம் பதிவேற்றபட்டதால் எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கூகுள் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப் ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |