அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் வைத்து தமிழ்நாடு ஏறுதழுவுதல் நல சங்கத்தின் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் சபரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை அனுமதியின்றி நடத்திய கார்த்திக், சாமிநாதன், ரகுபதி, பாலகிருஷ்ணன், கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.