தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் எந்த வேகத்தில் நாடுமுழுவதும் பரவுகிறதோ அதே விகிதத்தில் அது கீழே இறங்கிவிடும் என்று அமெரிக்க பேரிடர் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் அமெரிக்காவில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி அங்கு ஒரே நாளில் உச்சகட்ட பாதிப்பாக 4,40,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க பேரிடர் ஆலோசகரான அந்தோணி பாசி ஓமிக்ரான் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நாடு முழுவதும் எந்த வேகத்தில் ஓமிக்ரான் தொற்று பரவுகிறதோ அதே விகிதத்தில் அது கீழே இறங்கி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் ஓமிக்ரான் முதன் முதலாக உருமாற்றமடைந்த தென்னாப்பிரிக்காவில் இதே அனுபவம் தான் நிகழ்ந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த ஓமிக்ரான் மற்ற வகை கொரோனா மாறுபாடுகளை விட மிகவும் வீரியம் குறைந்ததாகவே காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.