பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனியை ஆதரித்துள்ளார்.
2022 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட பிறகு, பல விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்கு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிதானமான பேட்டிங் டிராக்கில் இந்திய டாப்-ஆர்டர் ஆடி சொதப்பியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்தது.
கேப்டன் உட்பட டீம் இந்தியாவின் அமைப்பை மாற்றியமைப்பது குறித்த விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்திய அணி வலுப்படுத்துவதற்கு முன்னால் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியை அணியில் சேர்ப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தோனிக்கு மிகப்பெரிய ஒரு பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனியை ஆதரித்துள்ளார். இதுகுறித்து சல்மான் பட் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது” இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை பொறுத்தவரையில் விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரும் அற்புதமான வீரர்கள். ஆனால் தலைமை மற்றும் தந்திரோபாய திறன் என்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஒரு பயிற்சியாளர் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அந்த அம்சங்களில் எம்.எஸ். தோனி எவ்வளவு வெற்றிகரமாக இருந்தார் என்பதைப் பார்க்கும்போது, அவர் எனது முதல் தேர்வாக இருப்பார்” என்றார்.
மேலும் அவரது வகையான மூளையால், வீரர்கள் பயனடைவார்கள். இந்திய கிரிக்கெட் முன்னேறும். உங்களால் அனுபவத்தை வெல்ல முடியாது, பல விஷயங்களைச் செய்த நபரை உங்களால் வெல்ல முடியாது””எம்.எஸ். தோனியின் ஈடுபாடு மற்றும் முன்னிலையில் இருந்து இந்திய கிரிக்கெட் கணிசமான அளவில் பயனடையும். அவர் கேப்டனாக இருந்ததால், அணிக்கான தந்திரோபாய திட்டங்களை வடிவமைக்கும் போது அவர் ஒரு பெரிய சொத்தாக இருப்பார்” என்று கூறினார்.
தொடர்ந்து அவர், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை இந்திய தேர்வு குழு வழங்க வேண்டும். “நீங்கள் ரிஸ்க் எடுக்காத வரை பெரிய விஷயங்கள் நடக்காது. இது ரிஸ்க் அல்ல, வீரர்களை சோதிப்பதே அதிகம். எல்லோரும் வெற்றி பெறுவார்கள் என்று இருக்காது, ஆனால் குறைந்த பட்சம் வாய்ப்புகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தால், அந்த இடைவெளிகளை நிரப்பக்கூடிய ஒன்று அல்லது இரண்டு வீரர்களை உங்களால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார்.
இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித், கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லாத நிலையில், விவிஎஸ் லட்சுமண் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் முறையே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருப்பார்கள்.