அனிகா சுரேந்திரன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருகின்றார் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக திரையுலகிற்கு அறிமுகமானார். பின் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இவர் இணையத்தில் போட்டோ ஷூட் நடத்தி கலக்கலான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
My hearty congratulations for the entire team of this movie. All the best 😊🎁👍@XBFilmCreators pic.twitter.com/yosDxaKPIF
— vijayantony (@vijayantony) June 5, 2022
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு வாசுவின் கர்ப்பிணிகள் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டரில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார், சீதா உள்ளிட்டோர் நிறைமாத கர்ப்பிணிகளாக இருப்பது போல் இருக்கின்றது. மணி நாகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இப்படத்தில் நீயா நானா கோபிநாத் மருத்துவராக நடித்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரில் விரைவில் டெலிவரி என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.