அனாவசியமாக பழைய புண்ணை எல்லாம் கிளற வேண்டாம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஷாருக்கான் மகன் கைதாகியிருகின்றார். எதனாலே ? போதை மருந்து வைத்திருந்தார். அந்த இளைஞன் கெட்டதற்கு காரணம் இந்த போதை மாபியா தானே. அதை ஒரு மையப் பொருளாக வைத்து ஒரு படம் வந்தது. அந்த படத்தில் இன்னும் இரண்டு மூன்று முக்கியமான விஷயம் சொல்லி இருக்காங்க.
மத மாற்றம், மதமாற்றம் ஏமாற்றம். அச்சுறுத்தி, ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றுவது, அதே போல மதம் மாறிய பிறகு அவர் யாராக இருந்தாலும் அவர்கள் பட்டியல் சமுதாயத்தில் இருக்க முடியாது. இதை வைத்து ஒரு படம் வந்துள்ளது. அப்போ சில பேரு எங்ககிட்ட ஆரிய, திராவிட இனவாதம் பேசுனாங்க.
இதையெல்லாம் பரப்பியவர்கள் யார் ? காரைக்குடிகாரர் சுபவீரபாண்டியன். அவருக்கு நான் ஒருமையில் பேசிட்டேன், அது என்னுடைய தரத்தை காட்டுகிறது. உங்களுடைய தந்தை பெரியாரின் தரம் என்ன என்று சொல்றேன் என்றால் தயவு செய்து அந்த தரத்தை நீங்க திருத்துகிறீர்களா ?
இந்து கோவில் முன்னாடி ஈ.வே.ரா சிலை வைத்திருக்கிறார்கள். அந்த சிலையில் என்ன எழுதி இருக்கிறீர்கள் ? கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, இது நாகரீகமான வார்த்தையோ, ஒருமையில் இல்லையோ, அது அவருக்கு தான் தெரியும். அதே மாதிரி நம்புபவன் முட்டாள் பரப்புபவன் அயோக்கியன். இந்த வார்த்தைகளை நீங்கள் அழிக்கனும், அப்பதான் நீங்கள் கண்ணியமானவர்கள்.
ஏனென்றால் திராவிட இயக்கத்தவர்கள் எவ்வளவு கண்ணியமானவர்கள் என்று ஈவேரா அவர்களிடம் இருந்து துவங்கி வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, தமிழன் பிரசன்னா, ஆர்.எஸ். பாரதி வரை நீங்க எல்லாரும் எவ்வளவு நாகரிகமாக பேசுகிறவர்கள், அப்படி என்று மக்களுக்கு தெரியும்.
அதனால் அனாவசியமாக பழைய புண்ணை எல்லாம் கிளற வேண்டாம். முதலில் கோவிலுக்கு முன்னாடி உள்ள ஈவெரா சிலையில் இருக்கும் வாசகங்களை அழியுங்கள். வேற என்ன வேணா எழுதிக்கோ… இது கடவுள் இல்லை என்று சொல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. கடவுளை மற மனிதனை நினை என எழுதிக்கோ.
ஆனால் இறை நம்பிக்கை உள்ளவர்களை காட்டுமிராண்டி, முட்டாள், அயோக்கியன் என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படி சொன்னால் சொன்னவர்களை காட்டுமிராண்டி, அயோக்கியன், முட்டாள் என்று சொல்ல உரிமை நீங்கள் எனக்கு தரிங்க. அதனால் அதை புரிந்து கொள்ள வேண்டுமென்று சுபவீரபாண்டியன் அவர்களுக்கு சொல்லி கொள்கின்றேன் என எச்.ராஜா தெரிவித்தார்.