தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரக்கூடிய வெற்றிமாறன், இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தையும், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராக “கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய தயாரிப்பில் உதயம் என் எச்4, தனுஷின் கொடி உட்பட பல படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை கெய்சர் ஆனந்த் எழுதி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகியது. இந்த நிலையில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “கீச்சே கீச்சே” பாடலின் லிரிக் வீடியோவானது வெளியாகியுள்ளது. இதை ஆர்யா தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.