ஆளுநரை திரும்ப பெற போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நீட்டை தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றது. தமிழக மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல். ஏக்களும் 4 எம்எல்ஏக்கள் பிஜேபியை தவிர அனைவரும் எதிர்க்கிறார்கள்.
மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் சட்டமன்றம். அந்த சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றி விதிவிலக்கு கோருகின்றது. இந்திய அரசியலமைப்பின் பால் கண்டிப்பாக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்து, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் அந்த வேலையை செய்யாமல், பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்.
அதனால்தான் அவரை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். நீட் இருக்கின்ற வரையில் 7.5 சதவீத ஊடாகத்தான் ஏழை மாணவர்கள் உள்ளே செல்கிறார்கள். நீட் இல்லை என்றால் 1ஆம் வகுப்பில் இருந்து 12 வகுப்பு படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு…. அவர்கள் படிக்கின்ற கல்வி முறையின் அடிப்படையில், மதிப்பெண் அடிப்படையில் கிடைக்கும் என தெரிவித்தார்.