Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அந்த விஷயத்திற்காக என்னை ஊசி போட சொன்னாங்க”…. பிரபல நடிகை பேட்டியில் பரபரப்பு பேச்சு…!!!!!

மார்பகத்தை பெரிதாக்குவதற்காக என்னை ஊசி போட சொன்னார்கள் என பிரபல நடிகை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். மேலும் வெற்றிச்செல்வன், பவானி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் சென்ற 2010ஆம் வருடம் வெளிவந்த ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் தற்பொழுது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அண்மையில் இவர் பேட்டி அளித்தது வைரலாகி வருகின்றது. அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது, ஒல்லியாக இருப்பதால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதாகவும் தன்னுடைய நல விரும்பிகள் தனது உடலில் சில மாற்றங்கள் செய்ய அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தினார்கள். அவ்வாறு அவர்கள் பேசியது என்னை கோபம் அடைய தான் செய்தது. ஆரம்பத்தில் உடலிலும் முகத்திலும் அறுவை சிகிச்சை செய்து மாற்றத்தை ஏற்படுத்த வலியுறுத்தினார்கள். மேலும் எனது மூக்கையும் மார்பகத்தை பெரிதாக்கும் ஊசி மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பலர் அறிவுறுத்தினார்கள். என்னுடைய நடிப்புக்கும் திறமைக்கும் கிடைக்காத வாய்ப்பு அறுவை சிகிச்சை செய்தால் தான் கிடைக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |