Categories
சினிமா

“அந்த விஷயத்தால் நான் வலியால் கதறுகிறேன்”… ஐஸ்வர்யா போட்ட ட்விட்டர் பதிவு…!!!

இயக்குனர் ஐஸ்வர்யா சில மாதங்களுக்குப் பிறகு தான் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவுலகில் பிரபல ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.

அண்மையில் இவர்  இயக்கிய முசாபிர் பாடல் தமிழில் பயணி என்று வெளியானது. இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது வொர்க் அவுட் செய்யும் போட்டோவை பகிர்ந்திருக்கிறார். சில மாதத்திற்கு பிறகு தற்போது ஒர்க்கவுட் செய்வதாகவும் உடல் வலியால் வருந்துவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, நம்முடைய உண்மையான சக்தியை யாரும் அறிய முடியாது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |