Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அந்த விலங்காக இருக்குமோ….? கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் இறந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் அருகே இருக்கும் அம்பேத்கர் நகரில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் பகல் நேரத்தில் தனது தோட்டத்து பகுதியில் கால்நடைகளை மேய்த்து விட்டு இரவு அங்கிருக்கும் பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று முன்தினம் சங்கர் வெளியூர் சென்றுவிட்டதால் தமிழரசி கால்நடைகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து விட்டு ஊருக்குள் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை 3 மணி அளவில் ஆடுகள் சத்தம் போட்டதால் அருகில் இருக்கும் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் தமிழரசிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு தமிழரசி தோட்டத்திற்கு சென்றபோது கடித்துக் குதறப்பட்ட நிலையில் 2 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் விலங்கு கடித்ததால் காயமடைந்த ஆடு தப்பித்து ஓடும் போது அருகில் இருந்த கிணற்றில் விழுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆட்டை மீட்டனர். அதன்பின் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு பதிவான கால் தடயங்களை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் எந்த விலங்கின் கால்தடம் என்பதும் உறுதியாக தெரியவில்லை. கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளை கொன்று வந்துள்ளது. இதனால் ஆடுகளை மீண்டும் கடித்து கொன்றது சிறுத்தையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றன.

Categories

Tech |