திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனக்கு சொந்தமான காரில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த போது கார் தாராபுரத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனால் காரில் இருந்த வேல்முருகன் மற்றும் அவரது நண்பர் ஜெகநாதன் ஆகியோர் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் சக்கரபாணி தனது காரை நிறுத்தி உடனே மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் அமைச்சர் வேறு ஒரு காரை வரவழைத்து இருவரையும் அதில் மதுரைக்குப் பத்திரமாக அனுப்பிவைத்துள்ளார்.