அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுவனின் பெயர் கார்லின் மிச்செலின். இந்த சிறுவனுக்கு 3 வயது ஆகிறது. இவருக்கு பிரைன் மற்றும் ஸ்பைனல் கார்டில் கேன்சர் இருந்துள்ளது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவரின் கடைசி ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
அவரின் கடைசி ஆசை என்னவென்றால் WWH எனப்படும் போட்டியில் HHH என்ற பிரபலமான நபரை எப்படியாவது தோற்கடித்து சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதுதான். இதை எப்படியாவது தெரிந்துகொண்ட HHH ஒருமுறை WWH ஷோவிற்கு வரவழைத்து ஸ்டேஜில் அந்த சிறுவன் HHH அடிக்கிறார். அவரும் தோற்பது போல் கீழே விழுந்து நடிக்கின்றார். பின்னர் அந்த சிறுவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர். இதையடுத்து அந்த சிறுவன் 2014ஆம் ஆண்டு இறந்து விடுகிறான். HHH அந்த சிறுவனுக்காக இப்படி ஒரு செயலை செய்துள்ளார். HHH செய்த இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.