மது அருந்துவதற்கு பணம் தராததால் காதலியின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் காந்துவா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனு 35 வயதாகும் இந்த பெண்ணின் கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோனு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லவ் குஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வந்துள்ளனர். லவ் குஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து மது அருந்துவதே வாடிக்கையாக வைத்துள்ளார்.
சம்பவத்தன்று லவ் குஷ் மது அருந்துவதற்கு சோனாவிடம் 200 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அப்போது சோனு பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லவ் குஷ் காதலி சோனுவின் மூக்கை அருகில் இருந்த கத்தியால் கரகரவென அறுத்துள்ளார். இதனை தொடர்ந்து சோனு வலியால் அலறி துடித்து உள்ளார். சோனுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சோனுவின் காதலனை கைது செய்துள்ளனர்.