Categories
உலக செய்திகள்

அந்த நாடுதான் டார்கெட்…. தாக்குதல் நடத்த தயார்…. 20 வயது வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம் …!!!

தீவிரவாதம் தொடர்பான சந்தேகத்தில் கைது செய்த வாலிபரின் வாக்குமூலம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜெர்மனியில் Badenwurttemberg மாகாணத்தில் காவல்துறையினர் கடந்த 30ம் தேதியன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து 20 வயது வாலிபரை தீவிரவாத தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த வேண்டும் மற்றும் அது போன்ற தீவிரவாத தாக்குதலில் நானும் ஈடுபட தயாராக உள்ளேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தாக்குதல் குறித்த தகவல்கள் திரட்டப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து வாலிபர் இருந்த குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை ஆனால் அவர் திரட்டிய தகவல்களின் தொகுப்பு ஒன்று சிக்கியுள்ளதால்,அது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |