பிரபல நடிகரின் படத்திற்காக நடிகை பிரியாமணி ரிஸ்க் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரியாமணி. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இதன்பின் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த பிரியாமணி தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆரிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் பிரியாமணி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பிரியாமணி ‘செகண்ட் இன்னிங்ஸில் வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் . முக்கியமாக நாரப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்ற ஆசை. இதுவரை மூன்று முறை அவருடன் இணைந்து நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை. இதனால் கைவசம் பல படங்கள் இருந்தபோதும் நாரப்பா பட வாய்ப்பு வந்தபோது மற்ற படங்களுக்கு கொடுத்த கால்சீட்டுகளை வாங்கி இந்த படத்திற்கு கொடுத்தேன் . நடிகர் வெங்கடேஷ் படம் என்பதால் மட்டும் தான் இந்த ரிஸ்க்கை எடுத்தேன்’ என கூறியுள்ளார்.