தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது.
இது குறித்து விவாதித்து தெளிவான முடிவெடுக்க தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.